Monday 23 May 2011

திருநாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்)



இறைவர் திருப்பெயர்  : நாகேஸ்வரர், நாகநாதர், சண்பகாரண்யேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்  : கிரிகுஜாம்பிகை, குன்றமாமுலையம்மை.
தல விநாயகர்    : சண்பக விநாயகர்.
தல மரம்   : சண்பகம்.
தீர்த்தம்    : சூரிய தீர்த்தம்.
வழிபட்டோர்   : ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), 
      கௌதமர், 
      நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர்.
தேவாரப் பாடல்கள்  : 1. சம்பந்தர் -  1. பொன்னேர் தருமே னியனே, 
      2. தழைகொள்சந்தும் மகிலும். 

      2. அப்பர்   - 1. கச்சைசேர் அரவர் போலுங், 
      2. நல்லர் நல்லதோர், 
      3. தாயவனை வானோர்க்கும். 

      3. சுந்தரர்  -  1. பிறையணி வாணு தலாள்.
nageccaram temple

தல வரலாறு :

  • இப்போது மக்கள் வழக்கில் திருநாகேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.
  • நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் 'திருநாகேச்சுரம்' எனப் பெயர் பெற்றது.
  • சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார்.
  • ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

long view of the temple


view of the rAjagOpuram

சிறப்புக்கள் :

  • சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது. அவர் மிகவும் நேசித்த தலம். இதனால் தம் ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார்.
  • இத்தலம் ராகு கிரகத்திற்குரிய தலமாதலின், இப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாகிவிடுகிறது.
  • தலவிநாயகர் - சண்பக விநாயகர் எனப்படுகிறார்.
  • இக்கோயிலுக்கு சண்பகவனம், கிரிகின்னிகைவனம் என்பன வேறு பெயர்கள்.
  • காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திரும்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது விசேஷம் என்பர்.
  • சேக்கிழார், அவர் தாயார், தம்பி உருவங்கள் கோயிலில் உள்ளன.
  • கண்டராதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.
  • இக்கோயிலில் 16 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன; இவை கண்டராதித்த, இராஜராஜன், இராஜேந்திர சோழர் காலத்தியவையாகும்.

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணத்திற்கு பக்கத்தில் உள்ளது. நகரப் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.

No comments:

Post a Comment