Monday 23 May 2011

திருப்பாம்புரம்.

சர்ப்பதோஷம் பற்றிய விவரங்களும் அவற்றிற்கான பரிகாரங்களும்:

நன்றி: ஆலய நிர்வாகம்



தோ­ஷங்கள்


1. ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷ­ம் இருந்தால்

2. 18 வருட இராகு தசா நடந்தால்

3. 7 வருட கேது தசா நடந்தால்

4. லக்னத்திற்கு 2ல் இராகுவோ கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8ல் கேதுவோ, இராகுவோ இருந்தால்

5. இராகு புத்தி, கேது புத்தி இருந்தால்,

6. களத்திர தோஷ­ம் இருந்தால்,

7. புத்திர தோஷ­ம் இருந்தால்,

8. ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் தடைபட்டால்,

9. கனவில் அடிக்கடி பாம்பு வந்தால்,

10. தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால்,

11. கடன் தொல்லைகள் இருந்தால்.



பரிகாரங்கள்



இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ­ தீர்த்தத்தில் நீராடி, வஸ்திர தானம் செய்து, திருக்கோயில் அலுவலகத்தில் பணம் செலுத்தி அச்சு ரசீதுப் பெற்றதும், பரிகாரத்திற்கு உரிய அபிஷேக சாமான்கள், வெள்ளி நாகம், பால் வழங்கப்படும்.



ஆலய அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் வெள்ளி நாகத்திற்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் இராகு,கேது பகவானுக்கு அபிஷேகம் செய்து, நீலம் மற்றும் பலவண்ண ஆடைகள், மல்லிகை, செவ்வரளி, நாகலிங்க பூ இவைகளில் ஏதேனும் ஒன்றை சாற்றி உளுந்து, கொள்ளு பொடி நிவேதனம் செய்து, பின்னர் அன்னதானம் வழங்க வேண்டும். முடிவில் புற்றுகோயில் வழிபாடு செய்வதின் மூலம்



அவரவர் தோஷ­ங்கள் விலகிவிடும் என்பது திண்ணம்.



நாள்தோறும் தோ­ம் நீங்கினோர் வந்து வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.

1. இந்திரன் சாபம் போக்கிய தலம்.


அகலிகையை கள்ளத்தனமாக சேர்ந்ததால் கெளதம முனிவரின் சாபத்துக்குள்ளான இந்திரன் உடலெங்கும் ஆயிரம் யோனியுடையவனாய் ஆகி ஒளி குன்றி வருந்தினான். தேவர்களின் ஆலோசனையின் பேரில் பாம்புரம் வந்த இந்திரன் பனிரெண்டு ஆண்டுகள் பூசை செய்ய மகா சிவராத்திரி முதல் சாமத்தில் இறைவன் காட்சியளித்து அவனுக்கு சாப விமோசனம் அளித்தார்.

No comments:

Post a Comment